×

ஆஸி.யில் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்க இந்திய குழு புறப்பட்டது


புதுடெல்லி: கூட்டு ராணுவ பயிற்சியான ஆஸ்ட்ராஹிண்டின் 2வது பயிற்சி நேற்று தொடங்கியது. வரும் 6ம் வரை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக 81 வீரர்களை கொண்ட இந்திய ஆயுத படைக்குழு நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. ஆஸ்ட்ராஹிண்ட் பயிற்சி 2022ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதல் பயிற்சி ராஜஸ்தானில் நடத்தப்பட்டது. இது இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாக திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டுறவை வளர்ப்பதும், இரு தரப்புக்கும் இடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதும் பயிற்சியின் நோக்கமாகும். இதில், துப்பாக்கிச்சூடு, கூட்டாக செயல்படும் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே புரிந்துணர்வை மேம்படுத்தவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்த பயிற்சி உதவும்.

The post ஆஸி.யில் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்க இந்திய குழு புறப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Aussie ,New Delhi ,Astrahind ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...